நட்பு

நட்பு

இரு கருவான,நட்பின் ஒரு தாய் பிள்ளைகள் தான் நாம்

நேற்று இன்று நாளை என்று
நாமும் பார்க்கா நாட்கள் என்று

சொந்தம் உண்டு பந்தம் உண்டு
நட்பு போல இருந்தது என்று

உன்னிடம் பேச தயக்கமும் இல்லை

நட்புக்கு தலைக்கணம் என்றும் இல்லை

நீயும் இன்றி நானும் இல்லை

இல்லை என்றும் (நட்புக்கு) (எங்களுக்கு)
இல்லை

எல்லை என்றும் ஒன்றும் இல்லை
ஜாதியும் மதமும் பார்த்ததும் இல்லை

சொல்லாமல் வருவாய் நீ துயரம் என்றால்

சொல்லியும் வராதா சொந்தங்களுக்கு முன்னால்

முயன்றால் உன்னால் முடியும் என்பாய்

தோல்விகள் துளைத்தால் நீ துணையாய் வருவாய்

நம்பிக்கை விதையாய் என் மனதில் நிறைவாய்

என் எண்ணமும் ஏக்கமும் நீ சொல்லாமல் அறிவாய்

என் இன்பம் துன்பம் அதில் நீயே உறைவாய்

நாம் நிழலாய் நடந்த நாட்கள் அதிகம்

வாழ்வில் தொலைவாய் கடந்த தூரங்கள் கொஞ்சம்

பிரிவுகள் நம்மை பிரிப்பதும் இல்லை

தொலைவுகள் என்றும்
( நம்மை) துளைப்பதும் இல்லை

நினைவாய் என்றும் நிறைந்தே இருப்போம்

களையா கனவாய் என்றும்
உறைந்தே இருப்போம்


Close (X)

0 (0)
  

மேலே