சிந்திப்பாய் மனமே - புத்தி தெளிவாய் மனமே

தேவையில்லை என்றவரையெல்லாம் தேடித் தான் பார்க்கிறது இந்த மனம்....

முள்ளில்லா ரோஜா வேண்டுமென்று வாசமுள்ள ரோஜாவை மறுக்கிறது இந்த மனம்....

நிகழ்கால சந்தோஷத்தை மறந்து, எதிர்கால துக்கத்தை நினைந்து தவிக்கிறது இந்த மனம்....

சொல்லுமா? சொல்லாதா??
உண்மையா???
பொய்யா???? ஏதும் அறியாததாய் வெறுப்பென்னும் கடலில் மூழ்கி சந்தோஷமென்னும் முத்தெடுக்க நினைக்கிறது இந்த மனம்....

மையின்றி எழுத்தாணியும் தனித்தே காகிதத்தில் காவியம் படைத்திடலாமோ?
எழுதுகோலின் கூடு இன்றி மையுந்தான் நிரப்பி புதுகவிதையும் எழுதிடலாமோ??

கணினியில் மென்பொருள் இல்லாமல் வன்பொருளால் என்ன பயன்???
வன்பொருள் இல்லாமல் மென்பொருளால் என்ன பயன்????

சிந்திப்பாய் மனமே....
புத்தி தெளிவாய் மனமே....

எதிரிகளை வெளியில் தேடாதே மனமே..
உனக்குள்ளே ஆயிரம் எதிரிகள், தீய எண்ணங்களென்னும் கூடாரமிட்டு கூடி உன்னை வீழ்த்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் மனமே....

நீயே உனக்கு அரசனாகு மனமே...
நல்ல எண்ணங்களென்னும் நண்பர்களை உனக்குள்ளே ஒன்று திரட்டு மனமே....
என்றும் கலங்காதே மனமே....
உன்னைத் தவிர வேறு எதற்கும் பயப்படாதே மனமே....
அறியாது தவறு செய்தாலும் அதற்குரிய தண்டனையைப் பெறத் தயங்காதே மனமே....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (16-Mar-17, 6:37 pm)
பார்வை : 594

மேலே