எங்கே அந்த காலம் --

எங்கே போனாய்
என் நெஞ்சினில்
காயதழும்பை பதித்துவிட்டு
போன இடம் சொல்
வானமானாலும் வந்துவிடுகிறேன் …………..


புத்தக பையை வீட்டில்
வைத்துவிட்டு
புழுதி காட்டில்
விளையாடிய போது
விண்ணில்
பறந்த கொக்கை பார்த்து
“கொக்கை கொக்கை பூ போடு ”
கோவில் வாசல் திறந்து பூ போடு ”
என் கையை சுற்றி பூ போடு ”
ஆடி பாடி முடிந்ததும்
நககண்ணில் வெள்ளை பார்த்து பூ போட்டது
முககண்ணில் முளைத்த அந்த சில நேர சுவனம் எங்கே ?

கட்டம் கட்டி
கால் நொண்டி அடித்து
கண்மூடி பாண்டியில்
“ரைட்டா ம்ம் ரைட் ரைட்டா ம்ம் ரைட் ”
ரைட்டா ம்ம் ரைட் ரைட்டா ஏய்ய்ய்ய் ராங் ”
கைகளின் ஆடிய அந்த சங்கீத சாரல் எங்கே ?

சில மணித்துளிகள்
பாச பிரிவு கோடு போட்டு
பூபரித்த
“பூ பறிக்க வருகிறோம்”
“பூப்பறிக்க வருகிறோ ”
“எந்த பூவை பறிக்க வருகிறீகள் ”
“எந்த பூவை பறிக்க வருகிறீகள்”
“பிச்சி பூவை பறிக்க வருகிறோம் ”
“பிச்சி பூவை பறிக்க வருகிறோம் ”
“யாரை விட்டு அனுப்புகிறீர்கள் ”
“யாரை விட்டு அனுப்புகிறீர்கள் ”
“தப்ரேஜை விட்டு அனுப்புகிறோம் ”
“தப்ரேஜை விட்டு அனுப்புகிறோம் ”
எங்களுக்குள் இழுத்து ஆடிய
அந்த ஆட்டம் எங்கே ?

இருபது விரல் கோபுரம் கட்டி
ஒருவர் பின் ஒருவர் நீர் எடுத்த
“ஒரு குடம் தண்ணிஎடுத்து
ஒரு பூ பூத்திச்சாம் ”
பாச வலையின் கையில் சிக்கிய
என்னை தூக்கி போட்ட என்
நண்பர்களின் கபடமில்லா சிரிப்பு எங்கே?

பட்ட பெயர் வைத்து
கண் மூடிக்கொண்டு
பட்ட பெயர் அழைத்து
“வா வா வந்து கொட்டிவிட்டு போ”
நறுக் என கொட்டி வீட்டு
பூமியில் முத்தமிட்ட கொண்டு இருப்போம்
யார் யன்று கண்டுபிடிக்க வேண்டும்
அந்த தலை கொட்டு அப்போது
தலையில் வலி இல்லை இப்போது
நெஞ்சில் வலி போகல

அம்மா வைத்த ரசத்தில்
சும்மா பிறக்கிய
புளியங் கோட்டையில்
பல்லாங் குழி விளையாடிய
அந்த தாவணி போட்ட மங்கை எங்கே?

எழுதிய போது
விழி விட்ட நீர்
கையில் பட்டதும் தொடர முடியவில்லை.

—————————————————————————-
Muthuraja G


Close (X)

0 (0)
  

சிறந்த கட்டுரைகள்

மேலே