தோழனோடு தோள் சாய்ந்து

தோழனோடு  தோள் சாய்ந்து

தோளோடு தோள் சாய்ந்து
மீளமுடியாத துயரத்திலும் மீள வைத்தாயே
அன்னையிடம் சண்டையிட்டேன்
தந்தையும் திட்டியதுண்டு
தமக்கையும் தூற்றியதுண்டு
தங்கையும் அடித்ததுண்டு
பல நாளும் என் கோபத்தையும் அழுகையையும் போர்த்துக் கொண்டவனே
நேரிலே கிண்டலிடுவாய்
என்னை நோக்கி பாயும் காமக்கண்ணை தோட்டாவாக சுக்குநூறாக்கினாயே
என் தோழா
என் தோளோடு தோள் சாய்க்க கணவன் வருவோனோ இல்லையோ
தோழனோடு தோள் சாய்ந்து என் கவலைகளை மறைந்தேனே
என் வாழ்க்கையில் பறந்தேனே


Close (X)

54 (4.9)
  

மேலே