மனம் பண்பட வேண்டும், புண்பட அல்ல, மூளை வசப்பட வேண்டும், வசியப்பட அல்ல

நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மனவளத்தை பண்படுத்துங்கள்,
மூளைத்திறனை அதிகப்படுத்துங்கள்.

மனதின் அழகுணர்ச்சிக்கு
தீனியிடுங்கள்,
அமைதி கொள்ள ஆரோக்கியமான விஷயங்களை உள்ளிடுங்கள்.

மூளைக்கு வேலை கொடுங்கள்.
போர்க்களத்தில் ஒரு வீரனின் கடமையைப்போல உங்களை ஏமாற்றும் விஷயங்களில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக்கொண்டு
உங்கள் மனித வளம்
உங்களுக்கும் எல்லோருக்கும் பயன்பட ஒவ்வொரு தடவையும்
முனைந்து கொள்ளுங்கள்.

அப்பொழுது தான்
நிஜத்தில் நிற்பீர்கள், இல்லையெனில் வெற்றுக்கனவில்
வெகுதூரம் பயணிப்பீர்கள்.

அமைதி, நிம்மதி ஏன் சந்தோஷம் என்பது உங்களை நீங்கள்
எப்படி நிலை நிறுத்துகின்றீர்களோ, அதைப்பொருத்தே அமைகின்றது.

மதமாற்றத்திற்கு தூண்டுவதற்கு
சில டிவிக்களில் உங்களை
வசப்படுத்த வைப்பதைப்போல்
உங்கள் கவனத்தை சிதறடிக்கவும்

உங்களை மெய்மறக்கச்செய்யும்
அலாதியான வெட்டி விஷயங்களில்
(தினம் டிவியில் பார்க்கிறோமே)
உங்களை திசை திருப்புவதிலிருந்து

விடுபடுங்கள்,
வெற்றிகொள்ளுங்கள்.
மனம் பண்பட வேண்டும், புண்பட அல்ல,
மூளை வசப்பட வேண்டும், வசியப்பட அல்ல.

- கவிஞர் செல்வமணி.
19-3-2017

எழுதியவர் : செல்வமணி (19-Mar-17, 8:43 am)
பார்வை : 512

மேலே