மெய் காதல் இறக்குமா

மெய் காதல் இறக்குமா

அவள் பெயர் ஆயிஷா!சுறுசுறுப்பும் சுட்டித்தனமுமம் நிரம்பியவள். குழந்தைகளின் தேவதை!அவள் பலரின் காதலை நிராகரித்தாள்,அவளின் பெற்றோர் பல வரண்களை நிராகரித்தனர். எல்லாம் அவர்கள் எண்ணத்திற்க்கு ஏற்ற அந்த ஒருவனுக்காக.

அவன் பெயர் இர்ஃபான்!அம்மாவின் செல்லம்.பல பெண்களின் கனவு நாயகன்.ஆனால் எந்த பெண்ணின் வலையிலும் விழாதவன்.தன் காதல் தன் வருங்கால மனைவிக்காக மட்டுமே சேமிப்பவன்.அந்த பிரபல ஆசிரமத்தின் ஒரு உருப்பினர்.

இறைவனின் அருளால் ஒரு நல்ல நபரின் மூலம் திருமணம் என்னும் பந்ததித்தில் நுழைய விழைகிறார்கள்.குடும்­பத்தில் சில சூழ்நிலைகள் காரணமாக திருமணம் மூன்று மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் சில சமயங்களில் பேசிக்கொள்வதும் உண்டு.

அவனுடைய தற்போதைய குறிக்கோள் அந்த புராஜக்ட்(project). அதில் அவன் வெற்றிக்கொண்டால் ஒரு பெரிய தொகை கிடைப்பதாகவும் அதை முழுமையாக தன் ஆசிரம குழந்தைகளின் தேவைகளை ஈடுகட்ட வேண்டும் என்னும் எண்ணத்தில் இருந்தான்.

இறுவரும் ஒரே பட்டபடிப்பை பெற்றிருந்ததால் அவளும் அவனுக்கு உதவியாக இருந்தாள்.சில தேர்வுகளுக்கு பின் அவர்களின் படைப்பிற்கு அங்கீகாரமும் கிடைத்தது.சில
எதிர்பார்த்த தொகையும் வந்தது.கூடுதல் பரிசாக வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பும் வந்தது.அவர்கள் ஆர்வம் காட்டவில்லை முதலில்.பின்பு இருவீட்டாரின் இனிய இம்சையால் ஒப்புதல் அளித்தனர்.அந்த பயனமும் திருமணத்திற்கு பின் என்றும் முடிவாயின.

ஒரு சில நாட்களில் பாஸ்போர்ட் விசா போன்ற வேலைகள் நடந்தன.அதன் அறிக்கையை பெற இருவரும் சென்றனர்.அவர்கள் வாழ்வின் திருப்புமுனையாக அந்த நாள் அமையும் என அவர்கள் சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அந்த தேவதைக்கு வந்தது சோதனை.அவள் ரத்தத்தில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.அலைகடல் அவனை சுற்றி வளைத்து எங்கோ தூக்கி சென்றது போல் உணர்ந்தான்.அவளின் கண்களில் அருவியாய் கண்ணீர் சிந்தின.ஆனாலும் அவள் தேம்பவோ அலரவோ செய்யவில்லை.அவளின் கண்ணீரை துடைக்க முயர்ச்சித்தவனை,அன்று அவர்கள் செய்த சபதம் நினைவுக்கு வந்தது.
திருமணத்திற்கு முன் நுனி விரல்கள் கூட தொடக்கூடாது என்று செய்த சத்தியம்.வந்த அழுகையை கட்டுப்படுத்தி நிறுத்தினாள்.அன்று அவன் கூறிய வார்த்தைகளுக்கா
க."அழுவது கோழைத்தனம். பெண்களின் கண்ணீர் விலை மதிப்பற்றது.அதை வீண் செய்யாதே",என்பதை நினைவுபடுத்திக் கொண்டாள்.

இர்ஃபான்,"ப­யப்பட தேவையில்லை.சிறிது செலவு செய்தால் உன் உயிருக்கு பிரச்சனையில்லை" என்றான்.சிறிது நேரத்தில் தெம்பு வந்தவளாய் அந்த அறிக்கையை சுக்கு நூறாக கிழித்தெரிந்தாள்."இறைவன் என்னை அழைக்கும் சமயம் நான் செல்வதே எனக்கு சிறந்தது" என்று ஆயிஷா தெளிவாக கூறினாள்.அவள் அவனிடம் இன்னுமொரு சத்தியமும் செய்ய சொன்னாள்.இதைப் பற்றி இனி எள்ளளவும் நினைக்க கூடாது என்று.அவள் கேட்ட எதையும் இல்லை என்று சொல்லாதவன் இதற்கும் சம்மதித்தான்.பின்பு எதேதோ காரணங்கள் கூறி இருவரும் வெளிநாடு செல்ல மனமில்லை என்று கூறினார்கள்.

அந்த அழகிய தினமுமம் வந்தது.இறைவனின் அருளால்,பெரியோர்களின் ஆசியால்,நட்பு வட்டாரத்தின் அன்பால் அவர்களின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.இல்வாழ்கை இனிதே சென்று கொண்டிருந்தது.அ
னைத்து குழந்தைகளுக்கும் ஆயிஷா தேவதையாகி போனாள்,

இர்ஃபானுக்கும் தான்.விதியும் வலியதுதானே...
நோயின் தாக்கமும் அதிகரித்தது.அவள் தன்னிலை மறந்து சுருண்டு விழும்பொழுதெல்லாம் அவன் இதயத்தில் யாரோ வெடிவைத்தது போன்று துடிதுடித்து போவான்.

நிலைமை கை மீறி போனது.இருவீட்டாரிடமும் உண்மையை சொல்லும் நேரமும் வந்தது.
நிலவரத்தை அறிந்ததும் அனைவரும் நொறுங்கிதான் போனார்கள்.அழுது புலம்பினர்.இவ்வாறு தான் நடக்கும் என முன்னரே தெரிந்து இருந்ததால் அனைவரையும் தேற்றுவது இர்ஃபானுக்கு சற்று சுலபமாகதான் இருந்தது.

அவளுடைய தற்போதய தருணங்கள் மருத்துவமனையில் கழிந்து கொண்டிருந்தன.ஆயிஷாவி­ன் பெற்றோர் இர்ஃபானிடம் இறுதியாக ஒரே கேள்வி கேட்டனர்,"ஆயிஷாவிற்கு இந்த கொடிய நோய் இருப்பது தெரிந்தும் எவ்வாறு மணக்க துணிந்தாய்".
அதற்கு இர்ஃபான் "நீங்கள் எனக்கு ஆயிஷாவை நிச்சயம் செய்த அன்றே அவள் எனக்கு மனைவி ஆகிவிட்டாள்.மனைவியை பாதியில் விட்டு செல்பவன் ஆண்மகனே அல்ல.அன்று நீங்களும் என்னை உங்கள் மகனாக ஏற்றுக்கொண்டதாக கூறினீர்கள்.இன்றுவரை நான் அதை மறக்கவில்லை,இனியும் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்றான் உறுதியாக.இதற்க்கு மேல் அவர்கள் ஒரு வார்த்தையும் கூறவில்லை.
இர்ஃபானின் பெற்றோர் கேட்ட ஒரு இறுதி கேள்வி "கொஞ்சம் செலவு செய்திருந்தால் இன்று அவள் பிழைத்திருப்பாளே".
அதற்கு அவன்,"இறைவனே அழைக்கும் சமயம் போய்விடுவதுதான் சிறந்தது.இத நான் சொல்லல நம்ம ஆயிஷா சொன்னாமா" என்று கூறிமுடிக்குமுன் அனைவரின் கண்களும் கலங்கிதான் போயின.

ஐ சி யு பிரிவில் இருந்து வெளியே வந்த உயர் மருத்துவர் அவர்களிடம் "கடைசியா அவங்ககிட்ட பேசரதுனா யாராவது ஒருவர் பேசிக்கோங்க" என்று கூறி சென்றார்.யாருடைய கருத்தையும் கேட்க்காமல் இர்ஃபான் அந்த அறையினுள் நுழைந்தான்.யாரும் அவனை தடுக்கவில்லை.

மெதுவாக உள்ளே சென்று அவளருகில் அமர்ந்து அவளின் கரத்தை தன் கரத்திற்குள் இருக்குமாறு பற்றி பிடித்துக்கொண்டான்.
அந்த நிலையிலும் தன் கணவனின் ஸ்பரிசத்தை அறிந்தவளாய் மெதுவாக தன் இமைகளை திறந்தாள்.அதிலிருந்து சில கண்ணீர் துளிகள் முத்துக்களை போல் உதிர்ந்தன.

இர்ஃபான்: என்ன விட்டுட்டு போக போறியாடா?
ஆயிஷா: உன்கூட வாழனும்னு ஆசையா இருக்கு இர்ஃபூ
இர்ஃபான்: அப்படியா?? அப்போ கொஞ்சம் பொறுத்துககோ. இறைவனோட அழைப்பு எனக்கு வந்ததும் ஜன்னத்திலயும்(சொர்க்கம்) உன் கைய புடிச்சுட்டு நடக்க நானே வருவேன்.இப்போ நீ கலிமா சொல்லுடா(இஸ்லாமியர்களின் இறுதி கடமை)
ஆயிஷா:லா இலாஹா இல்லல்லா முகம்மதூர் ரஸுலுல்லா
அவள் அந்த வார்த்தைகளை மொழிந்ததும் அவன் அவளின் நெற்றியில் பூ போல முத்தமிட்டான்.
அந்த நிம்மதியில் அந்த பிஞ்சு உடலை விட்டு ஆயிஷாவின் உயிர் பிரிந்தது.

ஆண்மகன் அழ கூடாதுதான்,ஆனால் அவனும் மனிதன்தானே.அழுதான்,வாழ்கையில் எதற்காகவும் கலங்காத அவன் அன்று கலங்கி கரைந்து போனான்.

அவன் அதிலிருந்து தேறுவதற்க்கு சில மாதங்கள் ஆனது.ஆனால் இர்ஃபான் காத்திருக்கின்றான் இறைவனிடம் இருந்து வரும் அழைப்பிற்க்காக.
ஆயிஷாவிடம் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்க்காக.

-என்றும் அன்புடன் ஷாகி


Close (X)

29 (4.8)
  

மேலே