அவள் கேட்டாள் - என்னை ஏன் உனக்கு பிடித்திருக்கிறது

அவள் கேட்டாள் - என்னை  ஏன்  உனக்கு பிடித்திருக்கிறது

பல அழகுப் பெண்டிர் காதல் வயப்பட்ட ஆடவனைக்
விழி சாகாமல்
மொழி பேசாமல்
மெளனமாக பேசும்
கேள்வியோ இது
உலகத்தில் இத்தனை பெண்ணுண்டு
அதிலும் அழகு கொஞ்சும் பெண்டிரோ ஏராளம்.
ஏன் என்னை நோக்கிப் பாயகிறான் இவன்
அவளுக்கு காற்றிலாடும் முல்லை போல
மனமும் அலைபாயுது
இவனிடம் கேட்டும் விட்டாள்,
"என்னை ஏன் உனக்கு பிடித்திருக்கிறது"
அவனுக்கும் சட்டென கேட்கவே
காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்புத்துண்டு போல
அவனும் அவளை பின்தொடர்ந்து பிடித்திருக்கிறான்
என்ன சொல்ல
உன் வேல் பாயும் விழியைப் பற்றிச் சொல்லவா?
வில் போன்ற இமையைப் பற்றிச் சொல்லவா
கோவில் மணி போல் கணீரென பேசும் ஆற்றலைச் சொல்லவா
எதிராக வரும் காற்றின் பொது குழலாடும் போது
அதை கோதிவிடும் அழகாய்ச் சொல்லவா
நீ உடுத்தும் உடையழகா
அல்லது பொடிநடையலாக
எதைச் சொல்ல என் பேரழகியே ,,சொல்


Close (X)

38 (4.8)
  

மேலே