அவள் மலரைப் பார்த்தாள்
அவள் மலரைப் பார்த்தாள்
நான் அவளைப் பார்த்தேன்
அவள் என்னைப் பார்த்த போது
நெஞ்சில் அலை வட்டங்கள் !
தென்றலின் பாடலுக்கு மொழி இல்லை
நான் செந்தமிழ் பாட வேண்டும்
அவள் இல்லை !
வண்டுகள் பாடிடும் பல மலர்களில்
தேனுக்காக !
நான் பாடுவது
அவள் ஒரு மலருக்காக !
மலர்களின் மௌனம்
ஒரு தவம்
அவள் மௌனம் கலைந்தால்
அது எனக்கு வரம் !
பாட்டுக்குப் பல்லவி எடுத்தேன்
பாதியில் நின்றது
அவள் நடந்து முடித்தாள் !
அவள் புன்னகைப் பூஞ் சோலை
நெஞ்சோரத்து அந்திக் கவிதை
மஞ்சள் வானத்து முழு நிலவு
மார்கழி இளங் காலை !
----கவின் சாரலன்