காதலின்றி இயங்காது உலகு

காதலின்றி இயங்காது உலகு

சூரியனுக்கும் பூமிக்கும்
சுட்டெரிக்கும் காதல்
பூமி சூரியனை நில்லாமல் சுற்றி வர
வேறன்ன காரணம் இருக்க முடியும்

பூமிக்கும் நிலாவுக்கும்
பூர்வ ஜென்ம காதல்
இல்லையேல்
யுகம் யுகமாய்
நிலா ஏன்
நில்லாமல் ஒடி வந்து
பூமியை சுற்ற வேண்டும்

நட்சத்திரங்களை பற்றி
சொல்ல வேண்டியதே இல்லை
நட்சத்திர காதல் இவர்கள் காதல்
சூரிய காவலன்
கண் மறைந்தவுடன்
கண் சிமிட்டி இரவெல்லாம்
காதல் செய்வதே
கைவந்த கலை

விண்ணுக்கும் மண்ணுக்கும்
விண்ணதிரும் காதல்
கார்முகில் திரண்டு
கறு கறுவென்று இருண்டு
இடி இடியென இடித்து
பளீர் பளீரென மின்னலடித்து
பெய்யென பெய்து மழை
மண்ணை வந்து முத்தமிடுகிறதே
இதிலிருந்து தெரியவில்லையா
விண் கொண்ட காதல் மண் மீது

ஆர்பபரிக்கும் கடல் அலைகளுக்கு
அளவற்ற காதல் கடற்கரை மீது
ஓய்வில்ஙாமல் வந்து வந்து
கரை தழுவி விலகி
மீண்டும் வந்து வந்து
கரை தழுவி விலகி
தன் காதலை
சொல்லிக் கொண்டே இருக்கிறது

காற்றுக்கும் செடி கொடி மரங்களுக்கும்
சலசலப்பான காதல்
எவர் கண்ணுக்கும் புலப்படாமல்
வரும் காற்றுக்கு மகிழ்ச்சியோடு
தலையாட்டுவதில் தெரியவில்லையா காதல்

கடலுக்கும் நதிக்கும்
கட்டுக்குள் அடங்காத காதல்
மலை மேல் தோன்றி
காடு பல கடந்து
நாடு பல நடந்து
கரை புரண்டோடும் நதி
நெடுந் தொலைவு கடந்தாலும்
சங்கமம் ஆவது கடலில் தானே

காதல் இயற்கையானது
இயற்கை காதலால் ஆனது

இயற்கையோடு காதல் கொள்வோம்
இயற்கையோடு இணைவோம்
இன்பம் காண்போம்

சரவணன் காளியப்பன்

எழுதியவர் : சரவணன் காளியப்பன் (25-Mar-17, 11:23 am)
பார்வை : 337

மேலே