மலரின் மறுபக்கம்
மலரின் மறுபக்கம்
ஒரு நாள் மட்டும் சிரிக்க ஏன் படைத்தான் அந்த இறைவன் என்று கேட்டது பூக்களின் இதயம்...
பார்விரும்பும் அழகினை கொடுத்தாய்
பலவண்ண வனப்பினை கொடுத்தாய்
வாழ்வினை மட்டும் ஒருநாள் கொடுத்தாயே
இறைவா உன்
வரத்தினில் கஞ்சம் கொண்டாயோ!!!
தென்றலுடன் போராட வைத்தாய்
வண்டுடன் திண்டாட செய்தாய்
அன்றாடம் என்பதை பறித்தாயே
இறைவா
இன்றுமட்டும் எம்மிடம் கொடுத்தாயோ!!!
ஒற்றைக் கணக்கிதழ்கள் கொடுத்தாய்
காற்றில் மயங்கும் வாசனை கொடுத்தாய்
நேற்றை வாழ்வினில் எடுத்தாயே
இறைவா ஏன்
ஒற்றை நாளினை கொடுத்தாயோ!!!
வரமாய் உன்னடி சேரவைத்தாய்
ஆரமாய் ஆகவும் வைத்தாய் -தேன்
சுரக்கும் தேகமும் தந்தாயே
இறைவா
இராப்பகல் ஒன்றை கொடுத்தாயோ!
மென்மையை கொடுத்தாய்
பெண்மையின் ஒப்புமை என்றாய்
தண்மையும் கொடுத்தாயே
இறைவா
ஏன் ஒருநாள் கொடுத்தாயோ...?
$by:S.Jeya