புவி வெப்பமயமாதல்

வெப்பம் தாங்காத பூமி பந்து

புவி வெப்பமாதல் என்பதை மறந்து

நொந்து வாழ்கிறோம் அதில் இன்று

உற்பத்தி மட்டும் இலக்கு இல்லை

உருகும்பனி நாம் கவலை ஏன் கொள்ள வில்லை

எழுதும் காகிதம் போதாது வெறும் வாயால் சொன்னால்

தீராது கடலும் உயரும் நதியும் குறையும்

அழகாய் காணும் உலகம்

சீற்றம் கொண்டு அழியும்

நமக்கிருக்கும் ஒரு கவலை

நாளை தலைமுறைக்கு எதுவும் மீதி இல்லை

புகையால் நச்சு ஒளியால் நச்சு

வெப்பம் கொண்டு குளிரூட்டும்

செயற்கை குளிரும் ஒரு நச்சு

சேர்த்து வைத்தோம் சேர்த்து வைத்தோம்

நாளை தலைமுறை வருமென்று

சுத்தமாய் மறந்து விட்டோம்

சுற்று சுழல் ஒரு சொத்து என்று

சுத்தமாய் காற்று சுவாசித்து முடித்து

மரத்தை நம் அழித்து விட்டோம்

மூச்சை நாம் பிடித்து கொண்டு

விடும் மூச்சை எடுத்து கொண்டு

அக்சிஜென் தரும் மரமில்லை

நாம் பிள்ளைகள் வாழ மர நிழலுமில்லை

இலகுவாய் நினைக்கும் சில நச்சு உள்ளவரை

பூமியின் அழிவை தடுப்பதற்கில்லை

பிளாஸ்டிக் பைகள் எல்லாம் பிளாஸ்டிக்

எதிலும் பிளாஸ்டிக் என்று கொண்டு சென்று விட்டு

மக்கி தொலைக்க முடியாதே

பிளாஸ்டிக் ஆயுளும் மனிதா உனக்கு கிடையாதே

புகைதான் பகை என்று சொல்லி சொல்லி சோர்ந்த

நிலையம் மாறும் மட்டும்

சுயமாய் நீ உணரும்வரை

வாழமுடியாது நம் தலைமுறை

வாகன புகை போதும் வாயில் புகை எதெற்கு

என்று வாதிட்டு சொன்னாலும்

புகைபிடிக்கும் கூட்டம் எந்நாளும்

நம்மில் உண்டு திருந்த மறுப்பதை கண்டு

நெஞ்சு வெடிக்குது இன்று

எழுதியவர் : rudhran (14-Jul-11, 12:30 pm)
பார்வை : 4860

மேலே