நீ வருகை புரியும் ஒரு விடியலுக்காக நான் காத்திருக்கிறேன்

இலையுதிர்ந்த மரங்கள்
இளவேனில் பூக்களுக்காக காத்திருப்பது போல்
இருள் படிந்த வானம்
ஒரு நிலவு வரக் காத்திருப்பது போல்
இடையில் நின்று விட்ட கவிதை
ஒரு சொல்லிற்காகக் காத்திருப்பது போல்
விடை பகர்ந்து சென்ற நீ வருகை புரியும்
ஒரு விடியலுக்காக நான் காத்திருக்கிறேன் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Mar-17, 3:56 pm)
பார்வை : 188

மேலே