விண்ணை தாண்டி வருவாயா

விண்ணைத் தாண்டி வருவாயா? (மண்ணின் காதல் கதை)
என் இனிய மழையே!!!
உன் அழகை வருணிக்க வார்த்தை இல்லையே என்னிடம்!!!
எப்பொழுதும் நீ கானல்நீர் போல காட்சி அளிக்கிறாய்...
முப்பொழுதும் நான் உன் நினைவாலே வாடுகிறேனே...
உன் வருகை தானே நம் வாழ்வின் தொடக்கம்...
நாம் சேர்ந்தாலே அனைத்தும் பொன் வசந்தம்...
பட்டனத்தில் வாழும் மக்களை கண்டு பயப்படுகிறாய் என்று கேள்வி பட்டேன்..
சென்ற முறை நீ இறங்கி வந்தும் நம்மை சேர விடாமல் தடுத்தது அந்த மக்கா குப்பைகளான பிளாஸ்டிக் பொருட்கள் தானே...
அதை நினைத்தே ஐயம் கொள்ளாதே அன்பே...
அதற்கு நானொரு வழி வகுத்துள்ளேன் அழகே...
நம்மையும் நம் காதலையும் மதிப்பவர்கள் விவசாயிகள் தான்...
இம்முறை நாம் அங்கே சந்திப்போம்..
இல்லை இல்லை இனி நாம் அங்கேயே சந்திக்கலாம்...
உறுதியாக வாக்களிக்கிறேன் உன்னை அன்பாய் பார்த்துக்கொள்வேன் என்று..
இறுதியாக அழைக்கிறேன் என்னை இம்சை என நினைத்துவிடுவாயோ என்று..
காத்திருக்கிறேன் அன்பே...
மனமிறங்கிடுவாயோ??!!
மழைப்பொழிந்திடுவாயோ??!!
.
.
.
.
.
.
.
ஏதோ மாற்றம்...
அங்கே என்ன கூட்டம்??
.
.
.
.
உன் உறவுகளான மேகங்கள் கூடுகிறதே
என் உண்மையான காதலை ஆமோதிக்கின்றதா!!!
மேகங்கள் கருமையாக மாறுகிறதே...
உன்னை பிரிவதால் வருத்தமோ??!!
அவர்களிடம் கூறிவிட்டு வா...
உன்னை அன்பாக அதரவாக பார்த்துக்கொள்வேனென்று...
என்ன சத்தம் அங்கே???
ஓஓ...மேள தாளங்களோடு இடி மழை என்னும் அற்புதமா!!!
என்னால் உணர முடிகிறது உன் வருகையை...
வருகிறாள் வருகிறாள்...
எங்களின் தூதுவர்களான மரம் செடிகளை நன்றிகளால் நனைத்துவிட்டு வருகிறாள்...
விவசாயிகளிடம் நம்பிக்கையும் நன்றியும் கூறிவிட்டு வருகிறாள்...
குழந்தைகளுடன் குதுகளித்து விட்டு வருகிறாள்...
வந்துவிட்டாள்!!!
இந்த மண்ணின் கண்ணான மழையே...
அந்த இயற்கையின் தேவதையான மழையே...
உன்னை என் இரு கரம் ஏந்தி வாரி கட்டியணைக்கிறேன்...
உன் அழகான முத்தங்களை என் மீது சிந்துகிறாய்...
ஆனந்தம்...பேரானந்தம்...
நம் போல் காதலர்கள் உலகில் இல்லையடி...
நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கும் புனித காதல் அல்லவோ இது...
அனைவரையும் மகிழ்வித்த திருப்தியில் வாழ்க்கையை ஆரம்பம் செய்வோம் வா!!!!!
---என்றும் அன்புடன் ஷாகி---