உசுரு இருக்கிற வர
முடிய கலச்சு போட்டு
லிப்ஸ்டிக் பூசி
கைபேசியில
அரகுறையா தமிழ் பேச தெரியாத
மோடர்ன் பொண்ணில்ல
நாட்டு கட்ட தான்
நான் ஒத்துகிறேன்
எத்தனை தடவை என் விழி
காதல் தூது விட்டது என்று
உனது விழிக்கு தெரிந்தும்
உன்ன கொஞ்சம் கூட
பொருட்படுத்தாம
தூச நினைக்கறவ அவ பின்னாடி
லூச சுத்தறயே
கொஞ்சம் பின்னாடி பாருடா
பக்கத்தில நான் நிக்கறேன்
வாழ் நாளெல்லாம்
உன் கை பிடிச்சு சுத்த
இந்த நாட்டு கட்ட
கட்டயில போனாலும் போவா
கழட்டி விட மாட்டா
உசுரு இருக்கிறவர உன்ன