அரும்புகள்

அரும்புகள்


இன்றே மலரும் அரும்புகள்
இந்தியப் பூவில் ஒன்றெனநாம்
இன்பம் பொங்கிடச் சொல்லிடுவோம் .
இனிதாய் நாளும் மலரட்டும் .


துன்பம் தன்னைப் போக்கிடவும்
துயரம் மனத்தில் நீங்கிடவும்
துடிப்பாய் நெஞ்சில் சொல்லிடுவோம்
தூய அரும்புகள் மலரட்டும் .


மலர்ந்த அரும்புகள் கருகாமல்
மணமும் வீசிப் பாரதத்தை
மலர வைக்கும் நாளிதுவாம் .
மங்கா அரும்புகள் மலரட்டும் .


அரும்புகள் அனைத்தும் குழந்தைகளே !
அனுதினம் இதனை உரைத்திடுவேன் .
அலர்ந்து மலரும் அரும்புகள்
அகமும் முகமும் மலரட்டும் .


மலரத் துடிக்கும் அரும்புகளே !
மங்கா கல்விக் கற்றிடுவீர் .
மனத்தில் பதித்துப் பள்ளிகளில்
மாறா இன்பம் பெற்றிடுவீர் .


இருண்ட வீட்டை மாற்றிடுவீர் .
இல்லை கல்லார் இனியில்லை .
புதிய உலகைப் படிப்பதற்குப்
பாட சாலை போந்திடுவீர் .



கண்ணில் காணும் மழலைகளைச்
கல்விச் சாலைக்கு அனுப்பிடுவீர் .
கல்விச் செல்வம் தந்திடுவோம் .
காவியம் படைப்பர் அரும்புகளே !


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் ( நி . மு . 323 )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Apr-17, 11:59 am)
Tanglish : arumpukal
பார்வை : 84

மேலே