ஹைக்கூ-01

01. சிறகுகள் இருக்கிறது
ஆனாலும் பறக்க முடியவில்லை
சிலையாய் சிட்டுக்குருவி

02. சுயம் நலமில்லை
சுயநலமுமில்லை
மனநோயாளி

03. முடி காணிக்கையோ?
மொட்டையாய் நிற்கிறது மரம்
இலையுதிர்காலம்

04. குறைமாத பிரசவமோ??
குப்பைத்தொட்டிலில் குழந்தை!

05. வறண்டு கிடக்கிறது நிலம்
ஆனாலும் பசுமையாய் இருக்கிறது
சுவரில் சித்திரம்

06. உடைந்துபோன நிலா
ஓடை நீரில்..

07. எவர் வருகைக்காக காத்திருக்கிறதோ
விடிந்த பின்பும் விழித்துக்கொண்டு
அணையா தெரு விளக்கு

08. அரைகுறை ஆடையில்
அலைந்து கொண்டிருக்கிறது
நாகரிகம்

09. விளக்கேற்றுகிறது விட்டில்பூச்சி
இருண்ட வீடு

10. சுவைக்கவில்லை இனிப்பு
சுதந்திர தின விழா
சிறைச்சாலையில்

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (12-Apr-17, 3:41 pm)
Tanglish : haikkoo
பார்வை : 298

மேலே