மழை

இது என்ன காலம் செய்யும் கோலமா
தெரியவில்லை பருவங்களும் மாறுதே
பருவமழை வாராது அனல் காத்து வீசுதே
நீரிலா நிலம் இருந்து என்ன பயன்
பயிர் ஏதும் விளையாது எங்கள்
நிலமெல்லாம் வெடித்து பாலையாய் மாறுதே
எங்கள் பசுக்களும் மாடுகளும் உண்ண
புல் பூண்டு இல்லாமல் வாடி
ஈனக் குரல் கொடுத்து மாயுதே
இறைவா இது என்ன எங்கள் மருதமும்
நீரில்லாது பாலையாய் மாறிவிடுமா
மண்ணையே நம்பி வாழும் நாங்கள்
போவது எங்கே தெரியலையே
இன்னும் காலம் தாழ்த்தாது
வந்திடுவாய் மாரி மழையாய்
மண்ணை நனைத்திடுவாய் எங்கள்
வயிற்றில் பால் வார்த்திடுவாய்
இறைவா வந்திடுவாய் நீ
எம்மைக் காக்கும் மாமழையாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Apr-17, 5:25 pm)
Tanglish : mazhai
பார்வை : 140

மேலே