என் தங்கை

என் தங்கை

ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
என் தங்கை போலொரு உறவில்லை
ஆயிரம் அன்பைப் பெற்றாலும்
என் தங்கை அன்புக்கு ஈடில்லை

அழகாய் எனக்கொரு தங்கை கேட்டேன்
ஆனால் அழகே தங்கையாய் வந்ததென்ன
அண்ணன் என்ற ஒரு சொல்லில்
அன்பை அள்ளித் தந்ததென்ன

கதைப்பினில் கோபத்தை நிறைத்திடுவாள்
அதிலே அன்பையும் மறைத்திடுவாள்
பேச்சினில் பாசத்தை புகுத்திடுவாள்
பேரன்பால் என்னை அரவணைப்பாள்

பாலை போன்ற குணமிருக்கும்
பஞ்சைப் போன்ற மனமிருக்கும்
மலர்ந்த மலரைத் தோற்கடிப்பாள்
மலர்ந்த முகத்துடன் என் தங்கை

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்


Close (X)

0 (0)
  

மேலே