வெட்கம்

வெட்கம்

மொட்டவிழ்ந்த பூவில்
முதற் பனித்துளி வீழ்ந்திட்ட
சிலிர்ப்பாய் உன்
பெண்மையின் வெட்கம்
நீ நாணும் அழகில்
சொக்கி நின்றது நான் மட்டுமா....
இல்லை மொழிகளுமா..?
ஆயிரம் இலக்கியம் படித்தபோதும்
வாயடைத்து நின்றேன்..
வார்த்தைகள் இன்றி....


Close (X)

5 (5)
  

மேலே