மனிதன் மாற்றி விட்டான்
மழை வந்தால் கொட்டித் தீர்க்கிறது
வெய்யில் என்றால் வாட்டி வறுக்கிறது
எது எப்படி என்றபோதும்
எதுவும் மாறவில்லை,
மனிதன் மாறி விட்டான்.
இயற்கை மாறிவிட்டதா?
இயற்கை மாறவில்லை,
மனிதன் மாற்றி விட்டான்,
எது எது இயற்கையோ,
இனி அது எல்லாமும் செயற்கையே!
ஐவகை செல்வங்களும்,
இயல்பு நிலை மாறி,
இருப்பு நிலையும் மாறி,
இருக்கும் நிலை அறியாமல் போகும்.
இனி,
உண்ணும் உணவும்,
பிறக்கும் மனிதனும் செயற்கையே,
பிறப்பு என்பதே மறக்க,
மலடு என்பதே நிலைக்க,
மண்ணில் மனிதரில்லா நிலை வர,
அன்று,
மண் பிழைக்கும்,
மண் மறு பிறப்பெடுக்கும்.