நீ கொடுமைக்காரி

உன் கூந்தல் வாசம்கொண்டு
தன்னை நறுமனையாக்கி கொள்ளும்
மல்லிக்கைக்கு இடமில்லை உன்னிடத்தில்

உன் கைகளில் கொஞ்சி விளையாட
ஆசை சப்தம் எழுப்பும்
கல கல வளையலுக்கு இடமில்லை உன்னிடத்தில்

உன் கருவிழியின் கருமையில்
தன்னை கூர்மையாக காட்டும்
கண்மைக்கு இடமில்லை உன்னிடத்தில்

உன் உதடத்தில் காதல் ரதத்தை
உருண்டு பிரண்டு உருவாக்கும்
உதட்டு சாயத்திற்கு இடமில்லை உன்னிடத்தில்

உன் கால்களின் தாளத்திற்கு
சரியான இசைமீட்டும்
கொலுசுக்கும் இடமில்லை உன்னிடத்தில்

எழுதியவர் : ராஜா (18-Apr-17, 11:49 am)
சேர்த்தது : ராஜா
பார்வை : 106

மேலே