பார்த்தாலே போதும்

முதல் முதலில் நான்
உன்னை பார்த்தபோது
என்னையே நான் மறந்தேன்
உன் முகம் என் நினைவைவிட்டு
அகலவே இல்லை ...

மீண்டும் மீண்டும்
உன்னை
பார்க்க தோன்றிற்று
உன்னை பார்த்தாலே
எனக்கு ஒரு நிம்மதி
உன் வருகைக்காக
நான் தவித்திருந்தேன்...

நான் ஒரு பேச்சாளன்
உன்னை பார்த்து
பேச நினைக்கும்போது
நான் உமையாகிறேன்
இன்று வரை உன் பேர் கூட
எனக்கு தெரியாது...

எனக்குள் ஒரு மாற்றம்
என்னையே நான் நேசிக்கிறேன்
ஒரு நாளில் நூறு முறை
கண்ணாடி பார்க்கிறேன்
ஒரு துணி உடுத்த
ஒன்பது துணி எடுக்கிறேன்
ஏன் இந்த மாற்றம்
எனக்குள் வந்தது புது தோற்றம்...

அன்பே..
நாளை உன்னை பார்த்து
முதல் முறையாக
உன் பேரை கேட்பேன்
சொல்லிவிடு அன்பே உன்
இனிமையான பேரை மறுகணமே
இல்லையேல் ஒரு புன்னகையாவது
உதிர்த்துவிடு...


Close (X)

0 (0)
  

மேலே