தமிழகமும் அரசியலும்

நடிகர்கள் எல்லாம்
ஒதுங்கி கொள்வதாய்

ஒதுங்கி நின்றவர்களெல்லாம்
மீண்டும்
நடிகர்களாய்

ஒரு இயக்குனரின்
மர்ம மரணத்திற்கே
விடையை காணோம்

இனி மீதமுள்ள
நான்கு வருட திரைபடத்தில்

கதைகளும் மாறும்
கதாபாத்திரங்களும் மாறும்
நடிகர்களின் பெயர்களும் மாறும்

இனி முன்னாள் முதல்வரின்
மரணத்தின் மர்மம் போலவே

நம் அரசியலின் இயக்குனர்
யார் யார் என்பதும்
மர்மமாகவே நீளும்

திரைபடத்தின்
திடீர் திருப்பங்களால்
இனி இயல்பு வாழ்க்கையில்
இடிகள் அவ்வபொழுது

எழுதியவர் : ந.சத்யா (20-Apr-17, 1:23 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 252

மேலே