உண்மையான அன்பு

உண்மையான அன்பு

மும்மாரி பொழிந்த அந்த உலகில் உண்மையான அன்பு நிலைத்திருந்த நேரம், போர்க்களத்தில் பூக்கள் பறிக்கும் மாயம் செய்த காதலை உணர்ந்த தருணம்,
தாயையும், கன்றையும் பிரித்த வைத்தாலும் தாயைக் கண்டதும் கன்றும், கன்றைக் கண்டதும் தாயும் உள்ளன்பால் ஈர்க்கப்பட்டு, தானாடவிட்டாலும் தன் தசையாடுமென்பதற்குச் சான்றாய், கன்றும் அன்னையை அம்மா என்றே அழைக்க,
அன்னையும் கன்றை அம்மா என்றே அழைக்க,
அந்த அன்பிற்கீடாய் எந்தக் காதலும் இவ்வுலகில் உண்டோ??...
அன்பே....

உடன்பிறந்த சகோதரர்களிடையே உண்மையான அன்பு மறையும் போது போராட்டமென்னும் யுத்தம் ஆரம்பமாக அங்கு கொலை பாதகமும், கள்ளமும், கபடமும், சூதும் நிறைந்துவிடவே தன் இரத்தத்தை தானே குடிக்கத் துடிக்கும் இருதயங்களைக் காண்கிறேன் இவ்வுலகமெங்கும்...

காதலென்றால் யார் காதல் சிறந்ததென போட்டி,
அன்பென்றால் யார் அன்பு உயர்ந்ததென போட்டி,
பகுத்தறிவென்றால் யார் சிறந்த பகுத்தறிவாதியென போட்டி,
இவ்வாறாய் பொறாமையால் எழும்பும் போட்டி மனப்பான்மை கொண்டே மனித இனத்தின் அழிவிற்கு ஆயத்தமாகிறது என்பதை அறிந்ததால், உண்மையான அன்பு கொண்ட இருதயம் கலங்கி நிற்பதை அறிவாயோ அன்பே???.....

காலம் பதில் தரும்.....


Close (X)

0 (0)
  

மேலே