தலைவி விடும் தூது

சகியே நீ தூது சென்று வாராய்
என் கண்ணாளனிடம் நாளை
என்னவானாகும் என் மணாளினிடம்,
இன்றோடு நாட்கள் மூன்றாகியும்
இந்த பாவை இங்கு அவன் நினைவில்
வாடி இருக்க இன்னும் வாராததேனோ
என்று கேட்டு அறிந்துவாடி சகியே
அவன் வரவை நாடி இன்னும்
நான் உண்ணவில்லை உறங்கவில்லை
என்று சொல்லடி அவனிடம் தோழி
இதற்க்கு சாட்சி அந்த நிலவுதான்
பிரிவால் வாடும் எனக்காக
வானில் வலம் வர மறந்து
எனக்காய் என் எதிரே இன்னும்
காய்கின்றது வெண்ணிலா ;
" போதும் உந்தன் இந்த பரிவு நிலவே,
நாளை முற்றத்தில் மீண்டும் வா ,

என் மன்னனோடு உனைக்காண்பேன்
என்று நான் கூறியதை சகியே நீ
அவனிடம் கூறி இன்னும் காலம்
தாழ்த்தாது வந்து என்னைக் கண்டிட

"காதல் சுரம் என்னை வாட்ட
குளிர் தரும் ஒளடதமாய் அவன்
வந்து என்னை அணைத்தால் என்
விரக தாபம் தீரும் என்று "அவனிடம்
மறவாமல் சொல்வாய்த் தோழி

நீ வரும் வரை இங்கு நான்
காத்திருப்பேன் சகியே
சென்று வா நீ இப்போது
நல்ல செய்தி தாங்கி வா
உன் வரவில் நான் ....................

சொல்வாய் தோழி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Apr-17, 3:38 pm)
பார்வை : 113

மேலே