மயங்குகிறேன் மழைக்காதலியே

மயங்குகிறேன் மழைக்காதலியே

மயங்குகிறேன் மழைக் காதலியே
.....மழையில் உனைப் பார்க்கையில்
மயக்கத்தில் சென்றேன் கனவுக்குள்
.....மங்கையுன் கரம் பிடித்தவாறு

கண்ணைக் கவரும் அழகேயுன்
.....காதலை சொல்வ தெப்போது?
மனதில் உள்ள ஆசைகளை
.....மனம் திறந்து சொல்லடி

இளமை காலம் கடக்குது
.....இனிமை யொன்றும் இல்லாமல்
எல்லை யில்லா தனிமையில்
.....எந்தன் இதயம் வாடுதிங்கு

இன்ப மெல்லாம் வந்துசேரும்
.....இணைந்து நாம் வாழ்கையில்
துன்ப மெல்லாம் விலகிவிடும்
.....துணையாய் நீயும் வருகையில்

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்


  • எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால்
  • நாள் : 24-Apr-17, 10:29 am
  • சேர்த்தது : வேல்பாண்டியன்
  • பார்வை : 248
Close (X)

0 (0)
  

மேலே