உன்னை நினைத்து

உன்னை நினைத்து

உன்னை பார்த்த முதல்,
உன்னை அடைந்திடுவேன் என்ற நம்பிக்கையில்,
உன்னிடம் பேசி நட்புறவாக,
உன்னை மட்டுமே நினைந்து,
உனக்காகவே வாழ்ந்து,
உன்னை அடைய,
உனக்கே தெரியாது,
உன் பின்னே அலைந்து-
எப்படியாவது என் காதலை தெரிவிக்க,
உன் முன்னே நிற்கிறேன்.
இன்று என்னை "ஏற்பாயோ" ? "மாட்டாயோ" ?
-என்ற குருட்டு நம்பிக்கையில்,

எப்படியாவது தாவிடுவோம் என்று,
மதில் மேல் நிற்கும் ஒரு பூனை போல,

கூடைக்குள் விழுவோமா மாட்டோமா என்று உலாவும்,
கூடை பந்து போல,

சதுரங்கத்தில் வெட்டு படாத ராஜாவாக
நான் கேட்க நீ கூறும் பதிலுக்காக ?


Close (X)

0 (0)
  

மேலே