என்னவரின் கோபம்

அள்ளி தெளித்துவிட்ட
கோபத்தோடு கதவை
இறுக சாத்திவிட்டு
செல்கிறாய் நீ
இறுகி போனது
என் இதயமும்
என தெரியாமல்

நீ சிரிப்போடு
சின்ன முத்தத்தோடு
விடைபெற்று செல்லும்
ஒவ்வொரு நாட்களும்
என் வீட்டின்
ஒவ்வொரு பக்கமும்
உன் புன்னகை பூக்களின்
தேன் மதுரம்
ஊறி கிடக்கிறது

இன்று நீ
தெரித்துவிட்டு
சென்ற உன் கோபங்கள்
என் வீடு முழுவதும்
நெருஞ்சி முட்களாய்
சிதறி கிடக்கிறது

அந்த முட்கள்
வாசலைதாண்டி
என் அழகிய
பூ கோலங்களை கூட
காயப்படுத்தியபடி

ஆனால் நீ
திரும்பி வருகையில்
உன்னை வரவேற்க
காத்திருக்கும் என்
நேச இதயமும்
பூ இதழ்களும்
என் பூக்கோலத்தைப்போல

எழுதியவர் : yazhinisdv (27-Apr-17, 4:08 am)
சேர்த்தது : யாழினி வளன்
பார்வை : 115

மேலே