நீர் வற்றிய குளம்

நீர் வற்றிய குளம்
கவிதை by : பூ.சுப்ரமணியன்

அன்று
நீர் நிறைந்த குளத்தில்
துள்ளித் திரிந்த மீன்கள்
அல்லி மலர்க் கூட்டம்
இதழ் விரிந்த
தாமரை மொட்டுகள்
அழகைக் கண்டு மகிழ்ந்த
குளத்துப் படிக்கற்களே
இன்று
நீர் வற்றிய குளம்
கண்டு ஏங்கி நிற்கின்றன !

அன்று
நீர் நிறைந்த குளத்தில்
நீச்சலடித்த சிறுவன்
பாசி படர்ந்த நீரில்
வீசியடித்த சிறுகல்
துள்ளித் துள்ளி ஓடுவதை
ரசித்து மகிழ்ந்த சிறுவன்
இன்று
நீர் வற்றிய குளம்
கண்டு ஏங்கி நிற்கிறான் !

அன்று
நீர் நிறைந்த குளத்தில்
வெண்மைப் படகுகள்
மிதப்பதைப்போல்
நீந்திய வாத்துக்கூட்டம்
இன்று
நீர் வற்றிய குளக்கரையில்
நீந்த ஏங்கி நிற்கின்றன !

அன்று
வாடிய பயிரைக் கண்டு
வாடி நின்றார் வள்ளலார்
இன்று
நீர் வற்றிய குளம்
நினைத்து பயிர்களே
வாடி ஏங்கி நிற்கின்றன !

பூ. சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ. சுப்ரமணியன் (28-Apr-17, 5:43 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
Tanglish : neer vattriya kulam
பார்வை : 175

மேலே