பாவேந்தர்

வந்தாரய்யா வந்தாரு ! பாவேந்தர் வந்தாரு !
பாட்டெல்லாம் எழுதிவைத்து படித்திடவே சொன்னாரு!

அமிழ்தென்று தமிழையே அழுகுபெற அழைத்தாரு
தமிழ்நமது உயிரென்று தமிழனுக்குச் சொன்னாரு !

எளியோரை வதைத்திடும் இழியசெயலை வெறுத்தாரு
இனியதமிழ்க் கவிதையில் எடுத்தன்று உரைத்தாரு !

கலைவளர்த்து வாழ்ந்திட, கழனிஉழுது தானியங்கள்
உலைவைக்க தந்திட அறிவுரைகள் தந்தாரு !

கொலைவாளை எடுத்து கொடியோர் செயல்முடிக்க
குகைவாழ்ந்திடும் புலியாய் குணத்தைக்கொள்ள சொன்னாரு !

தலையான அறத்தினால் சமநீதி சமூகமும்
தளைத்தோங்கி வாழ்ந்திட வழிபலவும் சொன்னாரு !

குடும்பம்நன்கு தழைக்க குடும்பவிளக்கு தந்தாரு !
கோபுரத்தில் தமிழையே ஏற்றிவைக்க நினைத்தாரு !

புதுவைதந்த சிங்கம் ! மாசில்லாத தங்கம் !
கவிதைபடித்து முடித்தால் கவியருவி கொட்டும் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (30-Apr-17, 10:02 pm)
பார்வை : 118

மேலே