பிறர் செய்த புண்ணியம்

இடி ஆடையணிந்து காலன் தொடர்கிறான் பேருந்தை

ஒரு உயிருக்கு பல உயிரின் காவு வேண்டாது
மாக்கள் வழி கண்டுற்றுனர்

தூரத்து விருட்சத்தை அனைவரும் தனியே தொடுகையில்
காலன் அவரை கவரட்டும்

கடைநபர்வரை காலன் நெருங்கவில்லை அவ்விருட்சத்தை

காலனனின் காலம் வந்து பாய்ந்தது பேருந்தினில்
உயிர் காத்த கடைநபர் விருட்சம் தொடுகையில்....

உன்னை காப்பது நீ சேகரித்த புண்ணியம் மட்டுமல்ல!!!

எழுதியவர் : தமிழ் தாசன் (3-May-17, 10:11 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 927

மேலே