விடிவு என்று...?

  ஏழைக்கு இல்லை இன்பம்
இருப்பது யாவும் துன்பம்
கூழையே கண்டால் இன்பம்!
கொடுமைதான் வறுமைத் துன்பம்
நாளையோர் விடிவை எண்ணி
வாழை போல் மடியு மிந்த
மாந்தருக் கென்று இன்பம்?

மாடென உழைத்தே ஈற்றில்
மனத்துயர் மட்டும் மிஞ்சும்!
பாடுகள் பட்டே பின்னால்
பலனது பூஜ்ஜியம் தான்
மாடியை நிமிர்ந்து நோக்கும்
மனிதர்கள் இவர் களாலே
மாடிகள் தன்னில் வாழ்வோர்
வதிகிறார் பணத்துக்குள்ளே!

குளுகுளுப் பான இல்லம்
குடித்திட"உயர்ரகங்கள்"
வலு வழுப்பான காரில்
வாழுவர்,அவர்க்குச் சொர்க்கம்
அழுகையே காணும் ஏழை
அன்னவர்க் கிது நரகம்!
பழுவான வாழ்க்கைப் பேறு
பார்த்திட வருவார் யாரு.......!


எழுதியவர் : கலைமகள் ஹிதாயா றிஸ்வி (16-Jul-11, 5:11 pm)
சேர்த்தது : kalaimahel hidaya risvi
பார்வை : 421

மேலே