கை கோர்ப்போம்

அலைபேசியின்
அலையால்அழிந்து வரும்
சிட்டுக்குருவியின் கனவை
ஒவ்வொரு வீடுகளிலும்
பானை கட்டி உணவு வைப்போம்
சிட்டுக்குருவியின்
வாழ்வை திருப்பி தர‌
கை கோர்ப்போம்....

விபரம் தெரிந்த நாள் முதல்
இந்த காவிரி பிரச்சினை..
ஓடிக்கொண்டே இருக்கிறது
நீர் மட்டும் ஓடுவதே இல்லை
நம் பிள்ளைகளின் தலைமுறைக்காவது
இந்த நீர் கிடைக்குமா
கர்நாடகம் யோசிக்குமா?
அல்லது நாம் ஒன்றாக கை கோர்ப்போமா..
கை கோர்ப்போம்... காவிரி கரை புரண்டோட...

ஒவ்வொரு ஊரிலிலும்
வீதியிலும் இருக்கும்
மது எண்ணும் அரக்கன்
பல குடும்பங்களை
சூறையாடினான்..
சூறையாடுகிறான்..
இன்னும்..இன்னும்..
சூறையாடிக்கொண்டுதான் இருப்பான்...
இந்த மது எண்ணும்
மதுக்கஷாயத்தை
இந்த உலகத்தை விட்டே
ஒழிப்போம் என‌
கை கோர்ப்போம்..

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (6-May-17, 12:13 pm)
பார்வை : 133

மேலே