செல்லக் கடிதல்
காதோர தலைமுடி ஒதுக்கி
வெண்முத்துக் காதணிகளை
பளிச்சிட வைப்பதாகட்டும்
தெற்றுப்பல் துறுத்த
இலவங்கப்பட்டையும் உப்பும்
சேர்க்கும் அவசியத்தை
பேச்சில் கொஞ்சுவதாகட்டும்
புதிதாய் முளைப்பவைகளை
சாபமிட்டும் இருக்கும்
பருக்களின் வேர்களைந்து
ஒப்பனை தெரியாத
ஒப்பனைக்குப் போராடி
அலைந்து பொறுக்கிய
நீலப்பச்சையில்
அவசரமாய் நுழைந்து
முழுதாய் நூற்றியிருபது வினாடிகளை விழுங்கி
வந்தடைந்தால்
சித்திரைத் திங்கள்
அக்னி வாவென்று
அணைத்து இணக்கம் சேர்த்ததில்
மூக்கின் நுனியில் பூத்தது
சின்ன முட்டைக் காளான்கள்..
-கார்த்திகா அ