சோமு-ராமு உரையாடல் வீடு போ போ ,காடு வா வா விற்கு விளக்கம்

சோமு (ராமுவை அணுகி கேட்கிறான்) : ஐயா, ராமு ஐயா , உங்கள ரொம்ப
நாளா ஒன்னு கேக்கணும்னு நினைத்துக்கொண்டே இருந்தேன் இப்போ
கேக்கலாமா ஐயா .....................

ராமு : டேய் சோமு , நான் உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன் நீ
எங்க வீட்டிலே ஒருவன், என் மகன் போல தாராளமா கேளுடா
தயங்காம................
சோமு : இப்பெல்லாம் பெரியவங்க , எதற்கெடுத்தாலும் இதெல்லாம்
எனக்கு எதற்கு "வீடு போ போ என்கிறது, காடு வ வ என்கிறது"
நீ அனுபவி ...........என்றெல்லாம் சொல்கிறார்களே இதுல அந்த
"காடு:" எதை ஐயா குறிக்குது? இடுகாட்டையா இல்ல வேறு
ஏதாவது உல் அர்த்தம் உண்டா ஐயா ?

ராமு : நல்ல கேள்வி கேட்ட போ சோமு............ இதுல அந்த "காடு"
என்றதும் இப்போதெல்லாம் இடுகாடு என்று மக்கள்
நினைப்பது தவறு.....அந்த காலத்துல மன்னன் முதுமை
எய்தியவுடன் ராஜ்யத்தை தன வாரிசுக்கு சூடிவிட்டு
மனைவியுடன் துறவு பூண்டு காடு சென்று விடுவான் ....
வீட்டை முற்றும் துறந்து , தவம் இருந்து மோக்ஷ நிலை அடைய
........................அதுதான் "கடு போதல்" (வானப்ரஸ்தம்)

இப்போதெல்லாம் வயது எற எற ........ஆசைகள் அதிகரிப்பது
தெள்ள தெளிவு...........யாரும் எதையும் துறக்க தயார் இல்லை
இப்படி ஒரு சுயநலம் இந்த கலியுகத்தில்...................
வானப்ரஸ்தம், காடு இவர்கள் சிந்தனைக்கு எட்டுவதில்லை
வெறும் கோபத்தில் இவர்கள் சில சமயம் வீடு போ போ என்கிறது
காடு வா என்கிறது என்பர்,,,,,,,,,,,,அதாவது இடுகாடு.......இது ஒரு
பேச்சுக்கு பாவலா ............நிஜ வாழ்க்கையில் இவர்கள்
நாடுவது சுகம் ஒன்றுதான், பதவி ஒன்றுதான்............!!!!!!!!!!!!!!!!!!!!



சோமு : ஐயா இப்போ தெளிந்து விட்டது இந்த வீடு போ போ காடு வா வா
விற்கு விளக்கம்................. மிக்க நன்றி ஐயா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-May-17, 2:25 pm)
பார்வை : 172

மேலே