புதைந்த காதல்

இதயத்தில் புதைந்திருக்கும்
உன் மீதான என் காதல்
சொல்லாமல் தவிக்கிறேன்...
சொல்ல வந்த தருணம்
வாயிருந்தும் ஊமையானேன்...
வார்த்தைகள் இருந்தும்
சொற்கள் முட்டி
தடுமாறின...

நிதம் உன் நினைவால்
உறக்கமின்றி வாடினேன்...
என் காதல் சொன்னால்
ஏற்பாயா என்னை...
இல்லை விட்டு செல்வாயா...

சொல்லி விட்டு செல்வதை
விட... சொல்லாமல் என் அருகில்
இருந்தாலே போதும்...
பல ஜென்மம் நான்
வாழ...

எழுதியவர் : பவநி (15-May-17, 7:19 am)
Tanglish : buthaintha kaadhal
பார்வை : 86

மேலே