கண்ட நாள் முதலாய்-பகுதி-02

...........கண்ட நாள் முதலாய்...........

பகுதி : 02

அங்கே அவளது தோழி பசிக்குது சாப்பிட ஏதாவது வாங்கித் தாடி என்று காது கிழியக் கத்திக் கொண்டிருந்தாள்.

"தின்னிப்பண்டாரம் அதுக்கு ஏன்டி இப்படி
பத்து ஊருக்கு கேட்கிற மாதிரி கத்திட்டு இருக்காய்"

"ஏய் யாருடி தின்னிப்பண்டாரம்,நீ தான்டி வெள்ளை போண்டா,குள்ளக்கத்தரிக்காய்
என்று நம் நாயகியின் தோழி பவியும் பதிலுக்கு கூவத் தொடங்கிவிட்டாள்..."

இதைக் கேட்டது தான் தாமதம் துளசி கீழே கிடந்த குடையைத் தூக்கி அவளை அடிக்கத் தொடங்கிவிட்டாள்..

"ஐயோ அம்மா,தாயே எதுக்குடி இப்போ அடிக்கிற,உண்மையைச் சொன்னா இப்படித் தான் உங்க ஊரில அடிப்பாங்களா??.."

"எதுடி உண்மை,என்னைப் பார்த்தா உனக்கு
குள்ளக்கத்தரிக்காய் மாதிரியா இருக்கு?? ஐந்தடியில செதுக்கி வைச்ச சிலை மாதிரி இருக்கிற என்னைப் பார்த்து நீ எப்படி இப்படி சொல்லலாம்??உனக்கு மனச்சாட்சியே இல்லையா??..."

"அடிப்பாவி,உனக்கு முதல மனச்சாட்சி இருக்கா?எது செதுக்கி வைச்ச சிலை நீயு??

"யா...யா,அதில உனக்கு சந்தேகமே வேண்டாம் பேபி....என்று இல்லாத கோலரை தூக்கி விட்டுக் கொண்டாள் துளசி..."

"இதை இந்த உலகமே தாங்காது,ஏன்டி நீ வாங்கி தர போற ஓசி சாப்பாட்டுக்காக நீ சொல்ற ஆகாசப் பொய்யை எல்லாம் கேட்டிட்டு இருக்கனும்னு தலையெழுத்தாடி எனக்கு..."

"கேட்க பிடிக்கலைனா போ,உண்மைகளை எப்போ உலகம் ஒத்துகிட்டிருக்கு?அதில நீ மட்டும் விதிவிலக்கா என்ன??"

"போகத் தாண்டி போறன்,யாருக்கு வேணும் உன்னோட சாப்பாடு...அப்பவே அந்த விவேக் பய சொன்னான் இவகூட எல்லாம் போனன்னா பல்லி மிட்டாய் கூட கிடைக்காது...என் கூட வா ஐஸ்கிறீம் வாங்கி தரேனு....உன்னை நம்பி வந்தேன் பாரு...என்னைச் சொல்லனும்....ஐஸ்கிறீம் போனது தான் மிச்சம்...."

போடி வெள்ளை போண்டா,என்று திட்டியவாறே மறுபக்கம் திரும்பி நடக்கத் தொடங்கினாள் பவி...

எப்பவும் போல் அவளோடு சண்டை போட்டுவிட்டு சமாதனம் செய்ய பின்னாலேயே ஓடினாள் துளசி.பவியை துரத்திக் கொண்டு வேகமாக வந்ததில் எதிரில் வந்தவனை கவனிக்கத் தவறிவிட்டாள்.கண்மூடித் திறக்கும் முன் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்ள,அவளைக் கீழே விழாமலிருக்க அவனது கரங்கள் அவளது கரங்களை இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டன....

தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (15-May-17, 9:06 pm)
பார்வை : 808

மேலே