கவிதைக் கப்பல்
கவிதைக் கப்பல்
//---------------------------//
கூடிப் பெய்த மழையில்
வாசற்படியோரங்கள் ஆனது
வாய்க்கால்கள்...
அப்பாவின் கவிதைப்பக்கங்கள்
இப்போ ஆனது
அழகழகாய்க் கப்பல்கள்...
பாப்பாவின் கைகளைவிட்டுப்
புறப்பட்ட கத்திக் கப்பலொன்று
கரையைத்தொடும்மும்
கவிழ்ந்து சொன்னது
கவிதை ரொம்பக்
கனமென்று ...
...மீ.மணிகண்டன்
#மணிமீ