மறப்பாயோ கண்ணே
அன்றோ !
அடிவயிற்றில் எட்டி உதைத்த மகனே
அவ்வலியினை பேரின்பம் என்றேன்...
வாயிற்படி இருந்து உதைக்கும் இன்றோ
பேதை உள்ளம் வாடுதடா கண்ணே...!
சோறு ஊட்டி வளர்த்தேன்
என் கண்ணே ! – ஒரு கை
சோறு போடா மறுப்பதென்ன...?
என் கண்ணே !
தாலி கட்டி வந்த பெண்ணை
தாரம் என்று ஏற்ற பிறகு
தாயுள்ளம் மறந்ததேன்ன...?
என் கண்ணே !
பாடுபட்டு படிக்க வைத்தேன்
என் கண்ணே ! – நீயோ
பார்க்காது போல் நடந்து செல்வதென்ன...?
என் கண்ணே !
பார்கின்ற போதெல்லாம்
பாசமாய் பார்த்தேன்
என் கண்ணே ! – ஆனால் நீயோ
பாநஞ்சாய் பார்பதேன்னவோ...?
என் கண்ணே !
*************
பதினொன்றாவது படிக்கும்பொழுது ( நவம்பர் 1996ல் எழுதப்பட்டது)