வெற்றிலை

நம்முடைய பழக்க வழக்கங்களில் வெற்றிலையின் பயன்பாடு தொன்று தொட்டே இருக்கிறது. ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் வெற்றிலை கண்டிப்பாக இருக்கும். மேலும் இந்துக்களின் அனைத்து காரியங்களிலும் வெற்றிலை முக்கியப் பங்கு வகிக்கின்றது.

இதற்கு காரணம் வெற்றிலையின் மருத்துவ குணமே. வெற்றிலையை நம்முடைய அன்றாட வழக்கத்தில் ஒரு உணவு வகையாக சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்த வெற்றிலையை கைமாற்றிக்கொள்வது நம்முடைய சுபகாரியங்களில் ஒரு அங்கமாக இருக்கிறது.
பொதுவாக வெற்றிலை பாக்கு போடுவது உடலுக்கு நல்லதல்ல என்று கூறுவது உண்மைதான். வெற்றிலையை சுண்ணாம்பு மற்றும் பாக்குடன் சேர்த்து சாப்பிடாமல் தனியாக சாப்பிட்டால் மட்டுமே அது உடலுக்கு நன்மை தரும்.

வெற்றிலை நம்முடைய ஜீரண சக்தியை அதிகரிக்கும். அதனால்தான் முன்பெல்லாம் உணவு அருந்தியப் பிறகு வெற்றிலையை மென்று சாப்பிடுவார்கள். மேலும் 40 வயதிற்கு மேல் ஜீரணசக்தி குறைவதால் வெற்றிலையை உண்ணுவது ஜீரணத்திற்கு உதவும்.

வெற்றிலை சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து நன்கு மென்று விழுங்கினால் அஜீரணக் கோளாறுகளைப் போக்கும்.

வெற்றிலையில் இருக்கும் கால்சியம் மற்றும் இரும்புச்சத்தை நம் உடல் இயற்கையாக ஏற்றுக் கொள்ளும் சத்துக்களாகும். நம் எலும்புகளுக்கு தேவையான கால்சியம் சத்தை வெற்றிலை கொடுக்கிறது.

வெற்றிலையில் இருக்கும் நீர்ச்சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து நிறைந்துள்ளது. மேலும் வெற்றிலையில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சவிக்கால் (Chavicol) இருப்பதாக ஆராய்சி கூறுகிறது. வெற்றிலையை உண்ணுவதால் மலச்சிக்கல் நீங்குவதோடு வயிற்றுப் புண்ணை போக்கும்.

மேலும் இருமலைக் குறைக்க வெற்றிலை சாறுடன் கோரோசன் சேர்த்து சாப்பிட வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் இருந்தால் வெற்றிலையில் கடுகு எண்ணையை தடவி மிதமாக சூடேற்றி மார்பில் சிறிது நேரம் வைத்து எடுக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்ய மூச்சுத்திணறல் நிற்கும்.

நரம்புகள் பலப்பட வெற்றிலைச்சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தினமும் குடிக்க வேண்டும். வெற்றிலையைச் சாற்றுடன் சிறிது கற்பூரத்தைச் சேர்த்து நெற்றியில் தடவ தலை வலி நீங்கும். வெற்றிலைச் சாரை மூக்கில் விட்டால் சளி ஒழுகும் பிரச்சனையை தீர்க்கலாம். வெற்றிலை வேரை மென்று வர குரல் வளம் பெருகும்.

மாதவன் என்ற மேடி

எழுதியவர் : (16-May-17, 9:58 pm)
Tanglish : VETRILAI
பார்வை : 73

சிறந்த கட்டுரைகள்

மேலே