என்னை நீயும் மறந்ததேன்

மௌனம் குடைந்து கொல்வதேன்
மனமும் வலியால் மரத்ததேன்
மஞ்சம் நெருப்பை உமிழ்வதேன்
மரண வாயில் தெரிவதேன்

புலன்கள் ஐந்தும் தவிப்பதேன்
புரித லின்றிப் போனதேன்
பொழிந்த பாசம் மறைந்ததேன்
பொறுமை காக்க மறுத்ததேன் ?

அன்னை போல காத்தவன்
அன்பை வாரித் தெளித்தவன்
அணைத்து உயிரில் உறைந்தவன்
அழவும் வைக்கத் துணிவனோ ?

இந்த நிலையும் மாறுமோ
இருளும் விலகி யோடுமோ
இறைவா உனையே நம்பினேன்
இன்பம் மீட்டுத் தந்திடு !

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-May-17, 12:37 am)
பார்வை : 496

மேலே