அன்பெனும் நிழல்
அன்பெனும் நிழல் ஆண்டிட வேண்டும்
அகில உலகத்தையும் தம்பி
கொஞ்சமும் அன்பின்றி தவிப்போர் உண்டென்ற
வார்த்தைகள் மறையட்டுமே தம்பி
இன்முகம் வேண்டும் இன்சொல்லும் வேண்டும்
இனிமை மிகவேண்டும் தம்பி
கோபங்கள் குரோதங்கள் பொறாமை பிரிவினை
அழிந்தே விடவேண்டும் தம்பி
நேர்மை வழிமுறை நியாயத் தலைமுறை
இருந்தால் நிம்மதியே தம்பி
வாய்மை ஜெயித்திட பாசம் நிலைத்திட
மருந்தே நம்மிலுண்டு தம்பி
அன்பென்ற மரம் தருகின்ற நிழல்
என்றென்றும் நன்மைதரும் தம்பி
அன்பினை மட்டுமே கொண்டு வாழ்வோர்க்கு
என்றும் ஜெயமுண்டு தம்பி