காதல் பாடல்

காதல் பாடல்

முகநூலில் தந்த மெட்டுக்கு...


பல்லவி :

தூறல் போடும் மேகம் - என்மேனி
தோகை விரித்து ஆடும்...
சாரல் போல மோகம் - இந்நேரம்
தேகம் நனைந்து வாடும்...
செம்மலர் வாசம் காற்றில் தூதாய் போக
செவ்வண்டு நேசம் பூவை வந்து சேரும்...
மன்னவன் தேரில் காதல் கணை வீச
மங்கையின் வாழ்வும் சோலையாக மாறும்......
தூறல்......

சரணம் 1 :

புல்மீது நான் சின்ன பனித்துளி
விண்ணோடு நீ அந்த கதிரொளி...
என்னோடு பேசும் அந்த ஒருநொடி
அமுதாய்ப் பருகிடும் உன் விழி...
நெஞ்சில் நீதான் புது பூவாய்
கொஞ்சி சிரிக்க நாணம் கொண்டேன்...
தீயும் குளிரும் உன் பார்வையிலே
அருவி போல மனம் காதலிலே......
தூறல்......

சரணம் 2 :

மண்மீது அசைந்தாடும் பூங்கொடி
உன்னோடு மோகம் கொள்ளும் பைங்கிளி...
கண்ணால் நீ அனுப்பும் ஓலையில்
பொன்னாய் தினம் உருகும் வான்மதி...
மஞ்சள் வானம் கையில் வந்து
கன்னம் பூசுது ஏனோ இன்று
வேரும் மலரும் நீ தீண்டயிலே
பஞ்சும் தீயும் சேரும் காதலிலே......
தூறல்......


Close (X)

17 (4.3)
  

மேலே