எனக்கு பிடிச்சிருக்கு

எங்கே நீ வருவாயோ..?
மாட்டாயோ..?
என்று ஏங்கி...
அங்கும்மிங்கும் நடந்துகொண்டிருந்த
நிமிடங்களில் உலகை
சுற்றிவந்திருக்கலாம்
நடைபயணமாக...

ரூபாய் நோட்டுகளை எல்லாம்
வெள்ளைத்தாள்களாக மாற்றி...
உன்னை நினைத்து உருகி...
வழிந்தோடிய வார்த்தைகளுக்கு
வண்ணம்பூசி விதவிதமாய்
படைத்திட்டேன் உன்னிடத்தில்...

ஆனால்
நீயோ...
விளங்கா பார்வையால்
விலங்காய் பார்த்து...
விடை தந்துவிட்டாய்
பிடிக்கவில்லை என்று...

ஏய்..! பேடி பெண்ணே..!
உனக்கெப்படித் தெரியும்
உன்னிடத்திலிருந்து வரும்
பிடிக்கவில்லை என்ற வார்த்தைதான்
எனக்கு ரொம்ப பிடிக்குமென்று..!

***********************
சிகுவார
ஆகஸ்டு 2003 ல் எழுதப்பட்டது.


Close (X)

13 (4.3)
  

மேலே