கருவிழி கணக்கு

கண்களின்
கருவிழி ஒன்றல்ல..
கணக்கு உனக்குத்தான் தெரியும்...

கடந்த கருவிழிப்பாதையில்
காதலனாக உன்னால்
கனவு காணப்பட்டவன் – இந்த
காயம்பட்ட காதலன்...

காதல் கனியும் முன்னே
காணடிக்கபட்டேன் – உன்
கடுத்த வார்த்தையால்... – நான்
கணக்கின் தொடக்கமா...? முடிவா...?
கணிக்க முடியவில்லை என்னால்..
காரணம்...
கலவரப்பட்டு இருந்தேன்...

கண்மணியே..! கண்களின்
கருவிழி கணக்கு ஒன்றல்ல..
கணக்கு உனக்குத்தான் தெரியும்...

காதலியே..! - இன்று உன்
கண்ணில் ஓர் புதுபிம்மம்..
காணவில்லை என்னை.. - உன்
கண்களின் குரூர விழியில்...

உன் கருவிழி கணக்கு
புரியவில்லை எனக்கு
கணக்கு உனக்குத்தான் தெரியும்...

****************
சிகுவார
ஜூன் 2004 ல் எழுதப்பட்டது.


Close (X)

9 (4.5)
  

மேலே