கஞ்சிக்கலயம்

கஞ்சிக்கலயம் சுமந்து
கச்சிதமாப் போறவளே
மிஞ்சிநீ போனாலும்
மீசையில மடங்கிடுவ...

விஞ்ஞானி தோப்பானே
வித்தகி உன்னால
அஞ்ஞானி ஆனேனே
அழகான கண்ணால...

கஞ்சா அடிச்சாலும்
கள்ளக் குடிச்சாலும்
பஞ்சா பறக்குதடி
பத்தினியே நடிக்காத...

கஞ்சன் நானும்
கவிஞனா உருமாறி
பஞ்சமே இல்லாம
பாட்டாடை தருவேனே...

அஞ்சாம நீயுந்தான்
அப்படியே வாயேன்டி
பஞ்சமே வந்தாலும்
பக்குவமா பாப்பேன்டி...

நஞ்சக் கலக்காம
நல்லத நீசொன்னா
தஞ்சமா உன்னான்ட
தாரேனே நாஎன்ன...

நெஞ்சில கொஞ்சம்
நேசத்த தந்தேன்னா
மிஞ்சிய நான்தந்து
மீட்டுவேனே தந்தானா...

எழுதியவர் : ‎கவிஞர் ஊ.வ.கணேசன்‎ (20-May-17, 1:03 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 67

மேலே