உலகின் பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழரான ஷிவ் நாடார்

உலகின் பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழரான ஷிவ் நாடார் பயன்படுத்தும் விலை உயர்ந்த கார் மற்றும் விமானம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்
சொத்து மதிப்பின் அடிப்படையில் உலகின் பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதில், உலக அளவில் முதல் 250 இடங்களில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலில், இந்தியாவிலிருந்து 10 பேர் இடம்பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்தவரும் ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடேட் [HCL] நிறுவனத்தின் ஸ்தாபகருமான ஷிவ் நாடார் இந்த பட்டியலில் உலக அளவில் 102வது இடத்தையும், இந்திய அளவில் 5வது இடத்தையும் பிடித்துள்ளார்.
திருச்செந்தூர் அருகே உள்ள மூலைப்பொழி கிராமத்தை சேர்ந்த ஷிவ் நாடார் தனது திறமையால் இன்று உலக அளவில் மிகபப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளார். தினத் தந்தி நாளிதழ் நிறுவனத்தின் ஸ்தாபகர் சி.பா. ஆதித்தனாரின் சகோதரி மகன்தான் ஷிவ் நாடார்.
தமிழ் வழியில் கல்வி பயின்று இன்று 12.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், இந்த உயரத்தை அடைந்திருக்கும் ஷிவ் நாடார் கார் பிரியரும் கூட. அவர் பயன்படுத்தும் கார்கள், விமானம் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.
ஷிவ் நாடார் தினசரி பயன்படுத்தும் கார் மாடல் ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம். மிக விலை உயர்ந்த சொகுசு கார் மாடலான ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் பெரும் கோடீஸ்வரர்களின் முதல் தேர்வாக இருக்கிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கீழ் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் வந்த பிறகு அறிமுகம் செய்யப்பட்ட முதல் கார் ஃபான்டம். 2003ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஃபான்டம் கார் சொகுசு வசதிகளிலும், ஆற்றலிலும் மிகச் சிறப்பானதாக இருக்கிறது.
மிக உயர் தரத்திலான லெதர் இருக்கைகள், மர அலங்கார வேலைப்பாடுகள் இந்த காரின் இன்டீரியருக்கு மதிப்பு சேர்க்கும் விஷயம். ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் கார்களில் விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றும் கொடுக்கப்படுகிறது.
ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் காரில் இருக்கும் 6.75 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 453 பிஎச்பி பவரையும், 720 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த கார் எஞ்சினின் 75 சதவீத டார்க் திறன் வெறும் 1,000 ஆர்பிஎம் எஞ்சின் சுழல் வேகத்திலேயே சக்கரங்களுக்கு கிடைத்துவிடும்.
எனவே, இந்த எடை மிகுந்த காரை அசால்ட்டாக வேகமெடுக்க வைக்கிறது இதன் வி12 எஞ்சின். 0- 97 கிமீ வேகத்தை இந்த கார் 5.8 வினாடிகளில் எட்டிவிடும் வல்லமை கொண்டது. அத்துடன், மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் வாய்ந்தது.
இந்த கார் 5.3 மீட்டர் நீளமும், 1.98 மீட்டர் அகலமும் கொண்டது. அத்துடன், 3.3 மீட்டர் வீல்பேஸ் இருப்பதால், உள்ளே அமர்ந்து செல்வதற்கு மிகச் சிறப்பான இடவசதியை அளிக்கும். இந்த காரில் 420 வாட் திறன் கொண்ட 15 ஸ்பீக்கர்களுடன் மியூசிக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ரோல்ஸ்ராய்ஸ் ஃபான்டம் வருவதற்கு முன்னர் மெர்சிடிஸ் பென்ஸ் 300 எஸ்இஎல் கார் மாடலையும் ஷிவ் நாடார் பயன்படுத்தி வந்தார். கிளாசிக் கார் அந்தஸ்தை பெற்றிருக்கும் அந்த காரை பொக்கிஷமாக வைத்திருக்கிறார்.
ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான செயல்திறனை இந்த கார் வழங்க வல்லது. இந்த காரில் 6.3 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 240 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 2 டன் எடையுடைய இந்த கார் மணிக்கு 229 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.
கார்கள் தவிர்த்து, வர்த்தக விஷயமாக செல்வதற்காகன சொந்த விமானத்தையும் பயன்படுத்தி வருகிறார். எம்பரெர் லிகஸி 650 எக்ஸிகியூட்டிவ் ஜெட் என்ற அந்த மாடல்தான் தற்போது சிவ் நாடாரிடம் உள்ளது.
இந்த விமானத்தில் 13 பேர் வரை பயணிக்க முடியும். சேட்டிலைட் டிவி, அலுவலக பணிகளை பார்ப்பதற்கான வசதிகள், ஆலோசனை கூடம், வைஃபை வசதிகள் உள்ளன.
இந்த விமானம் ரூ.175 கோடி மதிப்பு கொண்டது. இந்த விமானத்தை இரண்டு விமானிகள் இயக்குவர். இந்த விமானத்தில் ரோல்ஸ்ராய்ஸ் ஏஇ 3007ஏ2 எஞ்சின்கள் பொருத்தப்ப்டடு இருக்கின்றன.
ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 7,223 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மணிக்கு 850 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

எழுதியவர் : கவிழகி செல்வி (20-May-17, 1:34 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 138

மேலே