இந்தியாவை காத்திடுவோம்
இந்தியாவை காத்திடுவோம் - அதன்
வளங்களை எல்லாம் பெருக்கிடுவோம்
சாதி மதம் எல்லாம் ஒழித்திடுவோம்
இனி ஒற்றுமையாக வாழ்ந்திடுவோம்
உலகமக்களை அச்சுறுத்தும் தீவிரவாதத்தை
அழித்திடுவோம் - தீவிரவாதம் பற்றிய
தீமைகள் எல்லாம் கூறிடுவோம்
ஏழு அதிசயம் காத்திடுவோம்-இனி
எட்டாம் அதிசயம் படைத்திடுவோம்
உலகஅரங்கில் முதலாவதாக இந்தியாவை
அமர்த்திடுவோம்- இந்தியாவில் உள்ள
மக்களை எல்லாம் கல்வி அறிவு
பெறவைப்போம்
இந்தியாவிற்காக போரிட்டு இந்தியாவை
காத்திடுவோம்- இந்தியன் என்ற
உணர்வுடனே இறுதி மூச்சை
இழந்திடுவோம்..