அண்ணன் - சிறுகுறிப்பு

அண்ணன்- சிறுகுறிப்பு :


° தாயின் மடியை நமக்குத் தாரை வார்ப்பவன்.

° தாய்பாலும் நமக்கு தீங்கிழைத்து விடுமோ என்ற பயத்தால், "தான் முதலில் பரிசோதித்த", பின் நமக்குத் தருபவன்.

° நமக்கு சட்டை கொடுப்பதற்காகவே -
தான் வளர்பவன்.

° தம்பியும், தங்கையுமே கொஞ்சப்படுவதை பார்க்கும் போதெல்லாம்..தம்பி/ தங்கச்சி பாவம்ம்ல்ல ப்பா.. என்பதையே தாயிடமிருந்து தாலாட்டாகக் கேட்பவன்.

° காக்கா கடி முதல் கண்ணடிக்குறது வரை அத்தனையும் கற்பிப்பவன்.

° வளர்ந்து,வேலைக்குப்போய் குடும்பத்தின் இரண்டாம் தந்தையாய் மாறுபவன்.

° வீட்டின் அடுத்த தலைமுறைக்கு அன்னையை கொண்டு வருபவன்.

° தங்கை மகளுக்கு தாய்மாமன் சீர் செய்ய தவங்கிடப்பவன்.

° ஆறிலிருந்து அறுபது வரை பாடல் ஓடினால் தன்னை ரஜினியாக பாவித்து இல்லாத சோகத்தை நினைத்து தாடியை வருடுபவன்.

° இதைப் படித்த உடன் , புன்னகையுடன் வாழ்த்துகள் என தன் கருத்தைப் பதிவிடுபவன்.

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (25-May-17, 10:44 pm)
சேர்த்தது : சுரேஷ் சிதம்பரம்
பார்வை : 726

சிறந்த கட்டுரைகள்

மேலே