நாளை வரலாம் தரலாம்
மஞ்சள்நிற மலரொன்று மழைச் சாரல் துளிகள் ஏந்தி
மலர்த் தோட்டத்தில் பூத்துச் சிரித்திருந்தது
கொஞ்சுதமிழ் கவிதையொன்று நெஞ்ச மருங்கினில்
மெல்ல மலர்ந்து நடந்து வந்தது
விஞ்சியது அழகினில் யார் என்று கேட்டது ! மலரென்றேன் !
கொஞ்சம் கோபம் , ஊடலில் வரிகள் தரவில்லை
நாளை வரலாம் தரலாம் !
----கவின் சாரலன்